ADDED : ஜூன் 16, 2024 07:01 AM
திண்டுக்கல்: திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் 55 வயது ஆண் ஒரு மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
திண்டுக்கல் வந்த போது ரயில்வே மருத்துவர் ரகினா ரகுமான் சோதனையில் இறந்தது தெரிய வந்தது.
உயிரிழந்தவரை அடையாளம் காண்பதற்காக அவரது உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.