ADDED : ஜூலை 10, 2024 04:56 AM

கோபால்பட்டி, : திண்டுக்கல்லில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணால் கடத்தப்பட்ட பெண் குழந்தையை ஆட்டோ டிரைவர்கள் உதவியுடன் சாணார்பட்டி போலீசார் மீட்டனர்.
சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில் நேற்று மாலை 60 வயது மனநிலை பாதிக்கப்பட்ட பெண் பெண் குழந்தையை துாக்கிக்கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். குழந்தை அம்மா என அழுதபோது அதன் வாயை பொத்தி மிரட்டி உள்ளார். இதை கண்ட அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள் பெண்ணை பிடித்து விசாரித்தனர்.அவர் குழந்தையை பேத்தி என கூறி உள்ளார். இதன்பின் போலீசாரிடம் பெண்ணையும் குழந்தையையும் ஒப்படைத்தனர். சாணார்பட்டி போலீசார் குழந்தையின் புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம் மாவட்டத்தின் மற்ற ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்த செய்தி அலைபேசிகளில் வைரலானது . குழந்தையை காணவில்லை என திண்டுக்கல் மேற்கு போலீசில் புகார் கோடுத்த திண்டுக்கல் அடுத்த அழுகுபட்டியை சேர்ந்த மாரியம்மாள் குழந்தை என்பது தெரியவந்தது. அதன்படி மாரியம்மாள் சாணார்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வந்து காணாமல் போன பெண் குழந்தையை அடையாளம் காட்டி கண்ணீர் மல்க பெற்று கொண்டார்.
விசாரணையில் மாரியம்மாள் திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் நடந்த திருவிழாவிற்கு அக்கா வீட்டிற்கு வந்துள்ளார்.
பால்குடம் எடுத்தபோது இரண்டரை வயது குழந்தை பாண்டிஸ்வரியை கோயில் அருகில் நிற்க வைத்துள்ளார்.அப்போது அங்கு சுற்றி திரிந்த மனநலம்பாதித்த முருகாயி குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது.