ADDED : ஜூலை 10, 2024 05:03 AM

திண்டுக்கல், : பட்டேல் ஹாக்கி அகாடமி சார்பில், ஹாக்கி பயிற்சி முகாம் துவக்க விழா திண்டுக்கல் - பழநி ரோடு ராமையன்பட்டி ஹோலி கிராஸ் பள்ளியில் நடந்தது.
அகாடமி செயலாளர் ஞானகுரு, பள்ளி முதல்வர் அமலா ஆண்டனி வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் விளையாட்டு மேம்பாட்டு சங்க துணைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட ஹாக்கி சங்க உதவிச் செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் காஜா மைதீன் ஹாக்கி உபகரணங்களை வழங்கினார். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர் நன்றி கூறினார்.