/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குவியும் குப்பையை அகற்றாததால் நோய் தொற்று அபாயம் குவியும் குப்பையை அகற்றாததால் நோய் தொற்று அபாயம்
குவியும் குப்பையை அகற்றாததால் நோய் தொற்று அபாயம்
குவியும் குப்பையை அகற்றாததால் நோய் தொற்று அபாயம்
குவியும் குப்பையை அகற்றாததால் நோய் தொற்று அபாயம்
ADDED : ஜூலை 10, 2024 05:05 AM

கற்கள் பெயர்ந்த தார் ரோடு
அய்யலுார் அப்பி நாயக்கன்பட்டியில் இருந்து கொல்லப்பட்டி புதுார் செல்லும் தார் ரோடு கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு சிரமம் தருகிறது. வானங்கள் பழுதும் ஏற்படுகிறது .ரோட்டை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமசாமி, அய்யலுார்.
.................-------
குப்பையால் நோய் தொற்று
திண்டுக்கல் அருகே கொட்டப்பட்டி ஆலங்குளம் அருகே குப்பையை கொட்டி அள்ளாமல் குவிந்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது . இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரவணன், கொட்டப்பட்டி.-------..........
முடங்கிய ஆழ்துளை கிணறு
ஆத்துார் ஒன்றியம் அக்கரைப்பட்டியில் கிராம சாவடி அருகே ஆழ்துளை கிணறு செயல்பாடின்றி கிடப்பில் விடப்பட்டு உள்ளது. இதனை செயல்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சி.வேலுச்சாமி, அக்கரைப்பட்டி.
...........-------சேதமான மேல்நிலை தொட்டி
திண்டுக்கல் கூட்டுறவு நகர் மேல்நிலைத் தொட்டி அடிப்பகுதியில் சேதம் அடைந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது .ரோட்டோரத்தில் இருப்பதால் இதனை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.விஜயகுமார், திண்டுக்கல்.
........-------மரத்தில் அடிக்கப்படும் ஆணி
திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகளை தொங்க விடுகின்றனர் . மரத்தில் ஆணி அடிப்பதை தடுப்பதோடு தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துக்குமரன், திண்டுக்கல்.
..............-------
தாழ்வான மின் பெட்டியால் விபத்து
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் திறந்த நிலையில் உள்ள மீட்டர் பெட்டியில் விபத்து அபாயம் உள்ளது. தாழ்வாக தொடும் துாரத்தில் உள்ளதால் இதனை சற்று உயரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலச்சந்தர், திண்டுக்கல்.
............---------சாக்கடையில் தேங்கும் குப்பை
திண்டுக்கல் முனியப்பன் கோயில் தெரு சாக்கடையில் பிளாஸ்டிக் கலந்த குப்பை தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது . தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளதால் சாக்கடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.வினோத் குமார் திண்டுக்கல்.
................-------