ADDED : ஜூலை 19, 2024 05:33 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் வனத்துறை சார்பில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் தேக்கு,குமிழ்,நெல்லி, மகாகனி, முருங்கை, ஈட்டி, நாவல், வேம்பு, கொடுக்காபுளி,மா,மருது,பூவரசு, மலை வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை வளர்த்து விவசாயிகள்,சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக வழங்குகின்றனர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வனத்துறை தோட்டத்தில் வளர்க்கப்படும் மரக்கன்றுகளை வாங்கி நடவு செய்யவேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.