ADDED : ஜூலை 19, 2024 05:32 AM
திண்டுக்கல் : மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 10 மாவட்டங்களில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பகல் நேர காப்பகம் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்த விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பம் பெற உள்ளது.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கட்டட வாடகை, ஆசிரியர் சம்பளம், காப்பாளர் சம்பளம் மற்றும் இதர செலவுகள் உட்பட ஆண்டுக்கு ரூ.12.48 லட்சம் அரசால் வழங்கப்படும்.
விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், கலெக்டர் அலுவலக வளாகம், திண்டுக்கல் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.