மண் கொள்ளை லாரிகள் சிறைப்பிடிப்பு
மண் கொள்ளை லாரிகள் சிறைப்பிடிப்பு
மண் கொள்ளை லாரிகள் சிறைப்பிடிப்பு
ADDED : ஜூலை 31, 2024 05:38 AM
செம்பட்டி : ராமநாதபுரம் கண்மாயில் மண் கொள்ளைக்கு வந்த லாரிகளை சிறைபிடித்த மக்கள், அதிகாரிகள் வராததால் எச்சரித்து விடுவித்தனர்.
ஆத்துார் ஒன்றியம் ராமநாதபுரம் வெள்ளையன் கண்மாய், ராமநாதபுரம், எஸ்.பாறைப்பட்டி, வண்ணம்பட்டி பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாகும். 90 ஏக்கரிலான இக்கண்மாயில் சில நாட்களாக மண் திருட்டு தாராளமாக நடக்கிறது. பல்வேறு அமைப்புகள் சார்பில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கையில் தாமதம் நீடிக்கிறது. நேற்று மாலை மண் எடுத்து கொண்டிருந்த மண் அள்ளும் இயந்திரம், 3 டிப்பர் லாரிகளை இப்பகுதியினர் சிறைப்பிடித்தனர்.
வருவாய், கனிமவள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து காத்திருந்தனர். வெகுநேரமாகியும் அதிகாரிகள் வராததால் வாகனங்களை எச்சரித்து விடுவித்தனர்.