Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காந்திகிராம பல்கலை துணைவேந்தர் நியமனம் 3 ஆண்டுகள் நீடித்த 'பொறுப்பு' நிலைக்கு தீர்வு

காந்திகிராம பல்கலை துணைவேந்தர் நியமனம் 3 ஆண்டுகள் நீடித்த 'பொறுப்பு' நிலைக்கு தீர்வு

காந்திகிராம பல்கலை துணைவேந்தர் நியமனம் 3 ஆண்டுகள் நீடித்த 'பொறுப்பு' நிலைக்கு தீர்வு

காந்திகிராம பல்கலை துணைவேந்தர் நியமனம் 3 ஆண்டுகள் நீடித்த 'பொறுப்பு' நிலைக்கு தீர்வு

ADDED : ஜூன் 06, 2024 10:12 PM


Google News
Latest Tamil News
சின்னாளபட்டி:திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலையில் 3 ஆண்டுகளுக்கு பின் புதிய துணைவேந்தராக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பஞ்சநதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு சமூக பொருளாதார மாற்ற ஆய்வு மைய இயக்குனராக பணியாற்றிய மாதேஸ்வரன், ஆக. 2021ல் காந்திகிராம பல்கலை துணைவேந்தரானார். அடுத்த 3 மாதங்களில் பதவியை ராஜினாமா செய்தார். 2022 ஜூலை வரை மூத்த பேராசிரியராக இருந்த டி.டி.ரங்கநாதன் பொறுப்பு துணைவேந்தராக செயல்பட்டார். புதிய துணைவேந்தர் தேர்வுக்காக பீகார் மத்திய பல்கலை முன்னாள் துணைவேந்தர் ரத்தோர் தலைமையில் 3 பேர் கொண்ட தேர்வு குழு அமைக்கப்பட்டது.

இச்சூழலில் ரங்கநாதன் விடுவிக்கப்பட்டு புதுச்சேரி பல்கலை துணை வேந்தரான குர்மித்சிங்கை காந்திகிராம பல்கலை துணைவேந்தராக கூடுதல் பெறுப்பாக மத்திய உயர்கல்வி அமைச்சகம் நியமித்தது. 2023 ஜூலை 13ல் அவர் பொறுப்பேற்றார்.

இதனிடையே புதிய துணைவேந்தர் தேர்வு செய்யும் பணி நிறைவடைந்து மத்திய கல்வி அமைச்சகத்திடம் ஆவணங்கள் வழங்கப்பட்டன. டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் நியமனத்தில் காலதாமதம் நீடிப்பதாக பல்கலை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதன்பின் நவ. 24 முதல் சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் வி.காமகோடி காந்திகிராம பல்கலை கூடுதல் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

3 ஆண்டுகளுக்கு பின் பல்கலைக்கான துணைவேந்தராக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பஞ்சநதம் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கல்வி அமைச்சக உத்தரவின்படி வேந்தர் கே.எம்.அண்ணாமலை புதிய துணைவேந்தரை நியமித்துள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.இவர் இப்பதவியை 5 ஆண்டுகளுக்கு வகிப்பார் என பல்கலை பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பஞ்சநதம், அண்ணாமலை பல்கலை முன்னாள் பதிவாளராகவும் வணிக மேலாண்மை துறை தலைவராகவும் பணியாற்றி உள்ளார். இப்பல்கலையில் இதே துறையில் முதல் முனைவர் பட்டம், 40 முனைவர் பட்ட ஆய்வாளர்களின் நெறியாளர் மட்டுமின்றி சர்வதேச, தேசிய ஆய்விதழ்களில் பல கட்டுரைகள் எழுதி உள்ளார். பிரதமர் ரோஜ்கார் பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் முத்திரை பதித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us