/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கிரிக்கெட் லீக்; சச்சின் சி.சி.அணி வெற்றி கிரிக்கெட் லீக்; சச்சின் சி.சி.அணி வெற்றி
கிரிக்கெட் லீக்; சச்சின் சி.சி.அணி வெற்றி
கிரிக்கெட் லீக்; சச்சின் சி.சி.அணி வெற்றி
கிரிக்கெட் லீக்; சச்சின் சி.சி.அணி வெற்றி
ADDED : ஜூன் 07, 2024 06:51 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த மாவட்ட அளவிலான டேக் டி.டி.சி.ஏ., கிரிக்கெட் லீக் போட்டியில் சச்சின் சி.சி.அணி வென்றது.
பி.எஸ்.என்.ஏ. கல்லுாரி மைதானத்தில் நடந்த ஓட்டல் ஸ்ரீ பாலாஜி பவன் கோப்பைக்கான 4வது டிவிஷன் லீக் போட்டியில் ஆடிய கொடைக்கானல் யங்ஸ்டர்ஸ் சி.சி. அணி 25 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 144ரன்கள் மட்டுமே எடுத்தது. விஜயகுமார் 30, பிரசாந்த் 52ரன்கள், நாகராஜ் 3 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் சச்சின் சி.சி. அணி 12.5 ஓவர்களில் 5 விக்கெட் மட்டுமே இழந்து 149ரன்கள் எடுத்து வென்றது. பாலமுருகன் 42, யுவராஜ் 45ரன்கள் எடுத்தனர். பி.எஸ்.என்.ஏ. கல்லுாரி மைதானத்தில் நடந்த ஓட்டல் ஸ்ரீ பாலாஜிபவன் கோப்பைக்கான 4வது டிவிஷன் லீக் போட்டியில் ஆடிய திண்டுக்கல் ஏஞ்சல் காஸ்டர் சி.சி.அணி 25 ஓவரில் 8 விக்கெட் இழந்து 179ரன்கள் எடுத்தது. ஹரிஷ் பாபு 55, வினோத் குமார் 25, வீரா 31, பிரகலாதன் 27 (நாட்அவுட்)ரன்கள் எடுத்தனர். சேசிங் செய்த திண்டுக்கல் லெவன் ஸ்டார் சி.சி. அணி 18.2 ஓவரில் 99 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. பென்னி ஆல்பர்ட்டேவிட் 26, ஆனந்தகுமார் 27ரன்கள் எடுத்தனர்.