/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பட்டா வழங்கியதில் அதிருப்தி; முற்றுகை பட்டா வழங்கியதில் அதிருப்தி; முற்றுகை
பட்டா வழங்கியதில் அதிருப்தி; முற்றுகை
பட்டா வழங்கியதில் அதிருப்தி; முற்றுகை
பட்டா வழங்கியதில் அதிருப்தி; முற்றுகை
ADDED : ஜூன் 29, 2024 05:44 AM

பழநி, : பழநி மேற்கு கிரி வீதி அண்ணா செட்டி மடத்தில் வசிக்கும் மக்களுக்கு வடக்கு தாதநாயக்கன்பட்டியில் இடம் ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கியதில் அதிருப்தி அடைந்த மக்கள் சாலை மறியல் , தாசில்தார் அலுவலக முற்றுகையில் ஈடுபட்டனர்.
பழநி அடிவாரம் கிரிவீதி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வழங்கிய தீர்ப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. அதில் ஜூலை 2க்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய திண்டுக்கல் கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து 139 நபர்களுக்கு வடக்கு தாதநாயக்கன்பட்டி பகுதியில் இட ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கும் நிகழ்ச்சி தாசில்தார் சக்திவேலன் தலைமையில் தனியார் மண்டபத்தில் நடந்தது.
இரண்டு சென்ட் நிலம் வழங்குவதாக உறுதி அளித்த நிலையில் ஒன்றரை சென்ட் மட்டும் வழங்கி இருப்பது, ஒரே நாளில் வீட்டை காலி செய்து 17 கி.மீ., அப்பால் உள்ள இடத்திற்கு மாற்றம் செய்வது நடைமுறைக்கு ஏற்றதல்ல என பட்டாவைப் பெற்ற அன்னாசெட்டி மடப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புது தாராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் அவர்களை அகற்றினர். தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தாசில்தார் சக்திவேலன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஜூலை 1க்குள் அன்னா செட்டி மடத்தில் உள்ள வீடுகளை காலி செய்ய வேண்டும். இரண்டு சென்ட் இடம் வழங்க பரிசளிக்கப்படும் என உறுதி அளிக்க கலைந்து சென்றனர்.