/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விவசாய நிலத்தில் புகுந்த காட்டு மாடுகள் விவசாய நிலத்தில் புகுந்த காட்டு மாடுகள்
விவசாய நிலத்தில் புகுந்த காட்டு மாடுகள்
விவசாய நிலத்தில் புகுந்த காட்டு மாடுகள்
விவசாய நிலத்தில் புகுந்த காட்டு மாடுகள்
ADDED : ஜூன் 29, 2024 05:43 AM

செந்துறை : செந்துறை அருகே விவசாய நிலத்தில் புகுந்த காட்டு மாடுகள் விளை பயிர்களை சேதப்படுத்தின. செந்துறை அருகே மணக்காட்டூரை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் விவசாய தோட்டம் கரந்தமலை அடிவாரப் பகுதியில் உள்ளது. இதில் தென்னை, மா, பருத்தி என விவசாயம் செய்து வருகிறார். இங்கு நேற்று மலை தண்ணீருக்காக புகுந்த 10க்கு மேற்பட்ட காட்டுமாடுகள் விளை பயிர்களை சேதப்படுத்தின.
இதனால் தோட்டத்தில் உள்ளவர்கள் அச்சத்தில் உள்ளனர். காட்டு மாடுகள் தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.