/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தாண்டிக்குடி பகுதியில் யானை நடமாட்டம்; கண்டு கொள்ளாத கன்னிவாடி வனத்துறை தாண்டிக்குடி பகுதியில் யானை நடமாட்டம்; கண்டு கொள்ளாத கன்னிவாடி வனத்துறை
தாண்டிக்குடி பகுதியில் யானை நடமாட்டம்; கண்டு கொள்ளாத கன்னிவாடி வனத்துறை
தாண்டிக்குடி பகுதியில் யானை நடமாட்டம்; கண்டு கொள்ளாத கன்னிவாடி வனத்துறை
தாண்டிக்குடி பகுதியில் யானை நடமாட்டம்; கண்டு கொள்ளாத கன்னிவாடி வனத்துறை
ADDED : ஜூன் 29, 2024 05:45 AM

தாண்டிக்குடி : தாண்டிக்குடி குப்பம்மாள்பட்டி பகுதியில் நடமாடும் காட்டு யானைகளால் பொதுமக்கள் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
இம்மலைப் பகுதியில் சில ஆண்டுகளாக காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவற்றின் வருகையால் இங்குள்ள மலைவாழை, காய்கறி பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. தொடர்ந்து யான , வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு வனத்துறை முறையான இழப்பீடு வழங்காததால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். யானைகளை வன பகுதியில் விரட்டுவதற்காக வருகை தரும் வனத்துறையின் முயற்சிகள் கண்துடைப்பாகவே உள்ளது. மேலும் இவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்காத நிலையும் தொடர்கிறது. இதனால் மலைப்பகுதிகளில் விவசாயம் பாதித்துள்ளது.
சில தினங்களாக குப்பம்மாள்பட்டி, தடியன்குடிசை, நல்லுார்காடு, கள்ளக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடமாடுகிறது.
நேற்று முன்தினம் குப்பம்மாள்பட்டி கருப்பணசுவாமி கோயில் மெயின் ரோட்டோரம் உள்ள பாறைப்பகுதியில் யானை நடமாட்டம் இருந்தது கண்டு விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும் செய்வதறியாது தவித்தனர். தொடர்ந்து இப்பகுதியில் முகாமிட்டுள்ள யானையால் விவசாயி பயிர்கள் சேதம் அடைந்து வருகிறது. வனத்துறையினருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.