/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மக்களுடன் முதல்வர் குறைதீர் முகாம் மக்களுடன் முதல்வர் குறைதீர் முகாம்
மக்களுடன் முதல்வர் குறைதீர் முகாம்
மக்களுடன் முதல்வர் குறைதீர் முகாம்
மக்களுடன் முதல்வர் குறைதீர் முகாம்
ADDED : ஜூலை 24, 2024 05:33 AM

வடமதுரை : வடமதுரையில் தென்னம்பட்டி, குளத்துார், பி.கொசவபட்டி, பாடியூர் ஊராட்சி பகுதியினருக்கான மக்களுடன் முதல்வர் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது. காந்திராஜன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். தாசில்தார் சரவணக்குமார், பி.டி.ஓ., முருகேசன், ஊராட்சித் தலைவர்கள் கோமதி, சுகந்தி, நாராயணன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நிர்வாகிகள் பாண்டி, இளங்கோ, சொக்கலிங்கம், கருப்பன், முனியப்பன் பங்கேற்றனர். பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மக்களிடம் மனுக்கள் பெற்று ஆன் லைனில் பதிவேற்றம் செய்தனர்.
சாணார்பட்டி:கம்பிளியம்பட்டியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் 500 க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. தாசில்தார் மீனா தேவி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர்கள் விஜயா வீராச்சாமி, பாராசக்தி முருகேசன், சலேத் மேரி, வெங்கடேசன், மணிமாறன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் முகாமை துவங்கி வைத்தார்.
ஒன்றிய செயலாளர் மோகன், ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள்சுந்தரம், தி.மு.க., துணை செயலாளர் வீராச்சாமி, கவுன்சிலர்கள் அமிர்த தர்சினி ராஜா, வேலுச்சாமி, பானுமதி ராசசேகர், முத்துலெட்சுமி சண்முகம் கலந்து கொண்டனர்.
செம்பட்டி : ஆத்துாரில் மக்களுடன் முதல்வர் முகாம் ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமையில் நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ராமன், முருகேசன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., குமரவேல் வரவேற்றார். 454 பேர் மனு அளித்தனர். தாசில்தார், மருத்துவ குழுவினர் தவிர துறை அதிகாரிகள் முகாம் துவங்கிய சற்று நேரத்தில் சென்றனர். ஏற்பாடு குளறுபடிகளால் பதிவு பகுதியில் மனுதாரர்கள் நெரிசலால் அவதிப்பட்டனர். சக்கர நாற்காலி ஏற்பாடு இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.