/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு; விவசாய குறைதீர் கூட்டத்தில் புகார் வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு; விவசாய குறைதீர் கூட்டத்தில் புகார்
வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு; விவசாய குறைதீர் கூட்டத்தில் புகார்
வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு; விவசாய குறைதீர் கூட்டத்தில் புகார்
வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு; விவசாய குறைதீர் கூட்டத்தில் புகார்
ADDED : ஜூலை 24, 2024 05:32 AM
பழநி : பழநி பகுதியில் வரத்து கால்வாய்கள் ஆக்கிமிப்பில் உள்ளதாக விவசாய குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சரவணன் தலைமையில் பழநி வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
விவசாயிகள் விவாதம்
காளிதாஸ், பெரியம்மாபட்டி: உபரி நிலங்கள் குறித்த விவரங்கள் தற்போது மாற்றலாகி வந்துள்ள அதிகாரிகளுக்கு தெரிவதில்லை . கணினி சிட்டா, பட்டா விபரங்கள் அலுவலகங்களில் முறையாக இல்லை. அனுமதி இல்லாத செங்கல் சூளைகளை கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.டி.ஓ., : அதிகாரிகளுக்கு உபரி நிலங்கள் குறித்து அறிவுறுத்தல் வழங்கப்படும். கணினி சிட்டா, பட்டா விவரங்கள் பற்றி ஆய்வு செய்யப்படும். அனுமதி இல்லாத செங்கல் சூளைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் .
மதன குருசாமி, காளிப்பட்டி: ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் புகார் மனு குறித்த தகவல் வழங்கப்படவில்லை.
ஆர்.டி.ஓ., : விவரங்கள் முறையாக வழங்கப்படும்.
மதியழகன், அழகிய கவுண்டன் புதுார்: ஜவ்வாது பட்டி பெரிய குளம் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பில் உள்ளது .செடிகள் வளர்ந்தும் சேதமடைந்துள்ளது.
ஆர்.டி.ஓ., : நடவடிக்கை எடுக்கப்படும்.
விஷ்ணுவர்தன், கோதைமங்கலம்: கோதைமங்கலம் பாப்பான்குளம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. சர்வே செய்து அகற்ற வேண்டும்.
ஆர்.டி.ஓ., : சர்வே செய்ய அதிகாரிகள் விரைவில் வருவார்கள்.
சக்திவேல், ஆயக்குடி: ஆயக்குடி பட்டா நிலத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் மண் எடுத்து வருகின்றனர். இதனால் கனிம வளம் பாதிக்கப்படுகிறது.
ஆர்.டி.ஓ., : தனியார் பட்டா நிலத்தில் மண் எடுப்பது நிலத்தின் உரிமையாளர்கள் பொறுப்பு. அரசு நிலத்தில் மண் எடுக்க அனுமதி இல்லை.
களஞ்சியம், ஆயக்குடி: மண் லாரிகள் பள்ளி நேரத்தில் செல்வதையும் ,ஆயக்குடி கொய்யா மார்க்கெட் செயல்படும் நேரங்களில் செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
ஆர்.டி.ஓ., : உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
களஞ்சியம், ஆயக்குடி: எங்கள் பகுதியில் யானைகள் அடிக்கடி வருகின்றன. பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன.
ஆர்.டி.ஓ., : வனத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு விவாதம் நடந்தது.