ADDED : ஜூன் 01, 2024 05:49 AM

நத்தம்: நத்தம் கூட்டுறவு வங்கி சாலையில் மாவட்ட நூலக ஆணைக்குழு, தமிழ்நாடு கலை இயக்கிய பெருமன்றம் சார்பில் புத்தக கண்காட்சி நடந்தது.
நீதிபதி உதயசூரியா திறந்து வைத்தார். காந்திகிராம பல்கலை தமிழ்புலத் தலைவர் ஆனந்தகுமார், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் இஸ்மாயில், ஆசிரியர் சுரேஷ் காத்தான், செயலாளர் நந்தசிவம்புகழேந்தி ஏற்பாடுகளை செய்திருந்தார்.