/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கம்பிளியம்பட்டி கோயில் விழாவில் கழு மரம் கம்பிளியம்பட்டி கோயில் விழாவில் கழு மரம்
கம்பிளியம்பட்டி கோயில் விழாவில் கழு மரம்
கம்பிளியம்பட்டி கோயில் விழாவில் கழு மரம்
கம்பிளியம்பட்டி கோயில் விழாவில் கழு மரம்
ADDED : ஜூன் 01, 2024 05:50 AM

சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி சக்தி காளியம்மன், முத்தாலம்மன், பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் நடந்த கழு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இக்கோயில் விழா மே 14ல் சுவாமி சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம் , தீபாராதனை நடந்தது. மே 29 ல் சக்தி காளியம்மன், பகவதி அம்மன், மாரியம்மன் கரகங்கள் ஜோடிக்க முளைப்பாறியுடன் கோயில் வந்தடைந்தது. மாவிளக்கு, தீச்சட்டி, பொங்கல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
மாலையில் நடந்த பாரி வேட்டை நடந்தது. நேற்று முன்தினம் முத்தாலம்மன் கரகம் ஜோடித்து வானவேடிக்கையுடன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கழு மரம் ஊண்ட இளைஞர்கள் போட்டி போட்டு இலக்கை அடைந்தனர்.
முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இன்று மாலை அம்மன் பூஞ்சோலை செல்வதுடன் விழா நிறைவு பெறுகிறது.