/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பாலம் இல்லை; சேதமான ரோடால் அவதி பிலாத்து பகுதியினர் பரிதவிப்பு பாலம் இல்லை; சேதமான ரோடால் அவதி பிலாத்து பகுதியினர் பரிதவிப்பு
பாலம் இல்லை; சேதமான ரோடால் அவதி பிலாத்து பகுதியினர் பரிதவிப்பு
பாலம் இல்லை; சேதமான ரோடால் அவதி பிலாத்து பகுதியினர் பரிதவிப்பு
பாலம் இல்லை; சேதமான ரோடால் அவதி பிலாத்து பகுதியினர் பரிதவிப்பு

தகுதியற்ற ரோடு
எம்.சொக்கலிங்கம், தி.மு.க., மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர், வாலிசெட்டிபட்டி: மெத்தபட்டி, கம்பிளியம்பட்டி, வாலிசெட்டிபட்டி, பிலாத்து பகுதியினர் அதிகளவில் வடமதுரை செல்வதற்கு ரெட்டியபட்டி வழித்தடத்தையே பயன்படுத்துகின்றனர். இது தவிர இப்பகுதியில் களத்து வீடுகளில் வசிக்கும் விவசாயிகள், விளை நிலங்கள் வைத்திருப்போர் என பலருக்கு இந்த ரோடு முக்கியமானதாக உள்ளது.
கற்களாய் மாறிய ரோடு
கே.கணேசன், தொழிலாளி, ரெட்டியபட்டி: பிலாத்து ரெட்டியபட்டி வழித்தடத்தில் பெரிய வரட்டாறும், மோர்பட்டி தடுப்பணையில் இருந்து தும்மலக்குண்டு கண்மாய்க்கு நீர் கொண்டு செல்லும் வாய்க்கால் பகுதியிலும் பாலம் இல்லாமல் இருப்பது மிகுந்த சிரமத்தை தருகிறது. ஊராட்சி பகுதியில் இருக்கும் ரோடும் பல இடங்களில் தார் மாயமாகி வெறும் கற்கள் மட்டுமே பரவி கிடப்பதால் போக்குவரத்து கஷ்டம் தருகிறது.
தேவை உயர் மட்ட பாலம்
எஸ்.வெங்கிடுசாமி, விவசாயி, பிலாத்து: பிலாத்து ரெட்டியபட்டி வழித்தடத்தில் வரட்டாறு குறுக்கிடும் பகுதி வளைவாகவும், ஆழமாகவும் இருப்பதால் பல வகையிலும் போக்குவரத்திற்கு துன்பம் தரும் விஷயமாக உள்ளது. இதனால் இங்கு பாலம் அமைக்க இரு விவசாயிகள் நிலத்தை அரசிற்கு வழங்கி உள்ளோம். 3 ஆண்டுகள் கடந்தும் பாலம் கட்டும் பணி துவங்கவில்லை. கருத்தில் கொண்டு உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும்.