/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆயுஷ் மருந்து -விழிப்புணர்வு கூட்டம் ஆயுஷ் மருந்து -விழிப்புணர்வு கூட்டம்
ஆயுஷ் மருந்து -விழிப்புணர்வு கூட்டம்
ஆயுஷ் மருந்து -விழிப்புணர்வு கூட்டம்
ஆயுஷ் மருந்து -விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஜூன் 17, 2024 12:32 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட வளர் இளம் பருவ சிகிச்சை மையத்தில் ஆர்.பி.எஸ்.கே., தேசிய குழந்தைகள் நல திட்ட மருத்துவ அலுவலர்கள்,கிராம செவிலியர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை சார்ந்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
மாறுபாடான வளர்ச்சி கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆயுஷ் மருத்துவ சிகிச்சைகளை பாதுகாப்பாக நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பதால் குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு மிகவும் உதவும் என்று அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆயுஷ் மருத்துவர்கள் ஜெயச்சந்திரன், காமாட்சி, இக்ரா முல்லா மற்றும் பாலமுருகன் விளக்கம் அளித்தனர்.பெற்றோர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.
ழந்தைகள் நல, மனநல, பல், கண் மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்ட், வளர் இயல்பு ஆலோசகர், லேப் டெக்னீசியன்,குழந்தைகளின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.மருத்துவர் கலாவதி இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.