Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போலீஸ் செய்திகள்;

போலீஸ் செய்திகள்;

போலீஸ் செய்திகள்;

போலீஸ் செய்திகள்;

ADDED : ஜூன் 17, 2024 12:32 AM


Google News
இளம்பெண் தற்கொலை

கோபால்பட்டி: கோபால்பட்டி பூவகிழவன்பட்டியை சேர்ந்தவர் கரந்தன்,இவரது மகள் ராஜேஸ்வரி 22. இவருக்கும் மனக்காட்டூரை சேர்ந்த ராமச்சந்திரனுக்கும் 2 வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு யோகவர்ஷன் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ராஜேஸ்வரி விஷமருந்து சாப்பிட்டு இறந்தார். சாணார்பட்டி எஸ்.ஐ., ராஜேந்திரன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார். திருமணம் ஆகி 2 வருடங்களே ஆவதால் திண்டுக்கல் கோட்டாட்சியர் சக்திவேல் மேல் விசாரணை நடத்துகிறார்.

கூலித்தொழிலாளி பலி

கன்னிவாடி: தருமத்துப்பட்டி மொட்டுக்கோம்பை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி காளியப்பன்48. இவர் தனது டூ வீலரில் தருமத்துப்பட்டிக்கு புறப்பட்டார். (ஹெல்மெட் அணியவில்லை). செம்பட்டி- பழநி ரோட்டில் காளியப்பன்,வந்தபோது எதிர்திசையில் கன்னிவாடி நோக்கி வந்த கார் மோதியது. இதில் காளியப்பன் இறந்தார். கன்னிவாடி எஸ்.ஐ., சிராஜ்தீன், தப்பியோடிய கார் டிரைவர் குறித்து விசாரிக்கிறார்.

விபத்தில் இருவர் பலி

திண்டுக்கல் : சத்தீஸ்கர் மாநிலம் நரேன்பூரை சேர்ந்தவர் ராம்சிங்28. இவர் திண்டுக்கல் சி.டி.ஓ.,காலனியில் உள்ள கார்த்திக் என்பவரின் போர்வெல்லில் வேலை செய்தார். நேற்று முன்தினம் ராம்சிங்,திருச்சி ரோடு கொத்தம்பட்டி பிரிவு அருகே நடந்து சென்றபோது கார் மோதி இறந்தார். இதேபோல் திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்தவர் ஜோசப்ராஜா. இவர் கடந்த 14 ல் சிறுமலை பிரிவு அருகே டூவீலரில் வந்தபோது தடுமாறி விழுந்து இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

மின்சாரம் தாக்கி பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் ரெட்டியப்பட்டி ரெண்டலப்பாறையை சேர்ந்தவர் சாமிதாஸ்48. இவர் பொன்னகரம் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிகிறார். ஜூன் 10 ல் மொட்டணம் பட்டி ரெயில்வே கேட் அருகே பணியாற்றியபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.

ஒருவர் பலி

ஆயக்குடி: பழநி பழைய ஆயக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் 60. இவர் நேற்று முன்தினம் இரவு ஆயக்குடி கொய்யா மார்க்கெட் பகுதியில் நடந்து சென்றார். யில் வந்த டூவீலர் மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us