/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மஞ்சள் பைகள் வழங்கி சுற்றுச்சூழலை காக்கும் 'அச்சாணி'மஞ்சள் பைகள் வழங்கி சுற்றுச்சூழலை காக்கும் 'அச்சாணி'
மஞ்சள் பைகள் வழங்கி சுற்றுச்சூழலை காக்கும் 'அச்சாணி'
மஞ்சள் பைகள் வழங்கி சுற்றுச்சூழலை காக்கும் 'அச்சாணி'
மஞ்சள் பைகள் வழங்கி சுற்றுச்சூழலை காக்கும் 'அச்சாணி'

வெப்பமயமாதலை தடுக்கிறோம்
சோ.ராமு,ஒருங்கிணைப்பாளர்,செம்பட்டி: இயற்கையின் மகத்துவத்தை இன்னும் நாம் உணர வேண்டியது. மாசில்லா சமுதாயம் என்பது மரக்கன்று நடவு, மரம் வளர்ப்பு முறைகள் மட்டுமின்றி நிலத்தை விஷமாக்குவதை ஒழிக்க வேண்டும்.
--விழிப்புணர்வு போட்டிகள்
ஆசிரியர் கருப்பையா,அமைப்பின் வழிகாட்டி,செம்பட்டி: மஞ்சள் பை உபயோக அவசியத்தை அனுபவபூர்வமாக அறிந்துகொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம். வாசிப்பு திறன், புதிர், நடப்பு அறிவியல் கண்டுபிடிப்புகள், விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. வழக்கமான நிகழ்வுகளுடன் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் நிகழ்ச்சிகளும், அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் போட்டிகளும் நடத்தி பரிசுகள் வழங்குகிறோம். மாணவர்கள் மூலம் மரக்கன்றுகள் நடவு, சுற்றுச்சூழலில் பாலித்தீன் குறித்த விழிப்புணர்வு, தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் சார்ந்த பிரசாரம், மஞ்சள் பை பயன்படுத்த வலியுறுத்தல் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வழிகாட்டுதல், தண்ணீர் சிக்கனம், மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு போன்றவை தொடர்பாக விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.