ADDED : ஜூலை 21, 2024 05:24 AM

திண்டுக்கல்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கிளாசிக் போலோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது, இங்கு ஆண்டுதோறும் ஆடி சிறப்பு தள்ளுபடி மூலம் ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது. தாராபுரம் பைபாசில் அமைந்துள்ள கிளாசிக் போலோ நிறுவனத்தில் ஜூலை 5ம் தேதி முதல் கண்காட்சி நடந்து வருகிறது.
திண்டுக்கல், பழநி, கரூர், திருச்சி, தாராபுரம், திருப்பூர் உட்பட்ட பல பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் தேவையான ஆடைகளை வாங்கி செல்கின்றனர் .இந்நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை மிக குறைந்த விலையில் விற்கப்படுவதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சட்டை, பேண்ட் ,டி-ஷர்ட், உள்ளாடைகள், குழந்தைகளுக்கு தேவையான உடைகளை வாங்கி செல்கின்றனர். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் வாடிக்கையாளர் முன்கூட்டியே வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்லும்படியும் , ஆடி மாதம் முழுவதும் இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறும் என நிறுவனத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.