ADDED : ஜூலை 21, 2024 05:25 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 11, பிளஸ் 2 மாணவர்களுக்கு மனவளக்கலை தொடர்பாக கை, கண், மூச்சு , யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.
தலைமையாசிரியர் ஆரோக்கியதாஸ், இயக்கங்களின் பொறுப்பாளர் தெரஸ்நாதன் முன்னிலை வகித்தனர். மனவளக்கலை பொறுப்பாளர்கள் தாமேதரன், சரவணன், சுப்பையா, துணைபேராசிரியர்கள் பழனிராஜ், முருகேசன், இளங்கோவன், மதிவாணன், சங்கரேஸ்வரி நடத்தினர். வேளாண் பொறியாளர் தட்சிணாமூர்த்தி பேசினார். ஆசிரியர்கள் சாமி, ஆரோக்கியசாமி, அந்தோணி சகாயராஜ், முன்னாள் மாணவர் இயக்க நிர்வாகிகள் மாரிய ராஜேந்திரன், ஜெயசீலன் ஏற்பாடுகளை செய்திருந்தினர்.