Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அம்மன் குறித்து அவதுாறு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

அம்மன் குறித்து அவதுாறு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

அம்மன் குறித்து அவதுாறு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

அம்மன் குறித்து அவதுாறு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

ADDED : ஜூலை 16, 2024 03:59 AM


Google News
Latest Tamil News
சின்னாளபட்டி, : வலைதளத்தில் அவதூறு பரப்பிய பேரூராட்சி வரிவசூலர் மீது நடவடிக்கை கோரி, நுற்றுக் கணக்கானோர் சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சின்னாளபட்டி பேரூராட்சியில் வரிவசூலராக இருப்பவர் கருப்பையா52. இதே பகுதியில் நடந்த ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழாவில் இளைஞர்கள் கத்தி போட்டு வழிபாடு நடத்தினர்.

இதுதொடர்பாக அம்மன் பெயரை தவறாக குறிப்பிட்டு கருப்பையா பதிவிட்டார்.

தேவாங்கர் சமுதாய நிர்வாகி ராஜேந்திரன் சின்னாளபட்டி போலீசில் புகார் செய்ய போலீசார் வரி வசூலர் கருப்பையாவை கைது செய்தனர்.

அவர் ஜாமினில் வெளிவந்த நிலையில் விடுப்பில் சென்ற தகவல் பரவியது.

காந்தி மைதானத்திலிருந்து ஊர்வலமாக பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த மக்கள் நுழைவுவாயில் முன் முற்றுகையிட்டனர்.

அப்போது வரி வசூலர் கருப்பையா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். பேரூராட்சி தலைவர் பிரதீபா பேச்சு வார்த்தை நடத்தினார்.

அதிகபட்ச நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை அனுப்புவதாக தெரிவித்ததால் கலைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us