/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல்லில் காமராஜர் பிறந்த தின கொண்டாட்டம் திண்டுக்கல்லில் காமராஜர் பிறந்த தின கொண்டாட்டம்
திண்டுக்கல்லில் காமராஜர் பிறந்த தின கொண்டாட்டம்
திண்டுக்கல்லில் காமராஜர் பிறந்த தின கொண்டாட்டம்
திண்டுக்கல்லில் காமராஜர் பிறந்த தின கொண்டாட்டம்
ADDED : ஜூலை 16, 2024 03:55 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகள், பொது இடங்களில் அரசியல் கட்சியினர், அமைப்புகளால் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் பூமார்கெட் அருகே காமராஜர் உருவ சிலைக்கு பா.ஜ.,கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் மரியாதை செலுத்தபட்டது. ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவர் குமரன்,செயலாளர் ராம்குமார் முன்னிலை வகித்தனர் . செயலாளர்கள் முத்துக்குமார், ஆனந்தி, பட்டியல் அணி மாவட்ட தலைவர் இளையராஜா, ஸ்டாண்ட் அப் இந்தியா பிரிவு மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் செந்தில், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய தலைவர் காளியப்பன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் கணேசன், மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் கண்ணபிரான் கலந்து கொண்டனர்
*பிள்ளையார் நத்தம் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் அப்துல்முத்தலீப் தலைமை வகித்து, காமராஜர் படத்திற்கு மரியாதை செலுத்தினார். அரபி ஆசிரியர் அஜூரத் மு, முகம்மது மீர் , கோ ஆர்டினேட்டர் அப்துல் பாசித் அலி சதகி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை வர்ஷினி வரவேற்றார்.
*பேகம்சாஹிபாநகரம் தொடக்கப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பரமன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் ஜூவா நந்தினி முன்னிலை வகித்தார். முன்னாள் வார்டு உறுப்பினர் பாண்டி, கிளைச்செயலர் மலைச்சாமி, அபிராமி அம்மன் கோயில் அறங்காவலர் தாமோதரன் கலந்து கொண்டனர். தலைமையாசிரியை பாத்திமாமேரி நன்றி கூறினார்.
*அசனாத்புரம் தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நிகராபானு தலைமை வகித்தார், பொறுப்பு தலைமை ஆசிரியை அம்பிகாதேவி முன்னிலை வகித்தார்.
* திண்டுக்கல் செவாலியர் அகாடமி பள்ளியில் தாளாளர் ஆரோக்கிய பிரபு தலைமை வகித்தார். வளாக அதிபர் பீட்டர் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி பாஸ்கர்ராஜ், ஜான் லூக்காஸ், பள்ளி முதல்வர் ரோஸ்லின், துணை முதல்வர் ஞானசீலா பங்கேற்றனர்.ஒருங்கிணைப்பாளர் பூங்கொடி வரவேற்றார்.
* ஐக்கிய ஜனதா தலைவர் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் கருப்பணன் மாலை அணிவித்தார். மாநில செயலர் சுந்தரேசன், நகர தலைவர் பழனியப்பன் இனிப்பு வழங்கினர்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், மாவட்ட துணைத்தலைவர் பழனிசாமி, ஒன்றிய தலைவர் சுப்ரமணி, எரியோடு நகரத்தலைவர் நாகராஜன், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்தகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரன். மாவட்ட செயலர் சாமிவேல், நகர செயலர் செந்தாமரை கலந்து கொண்டனர்.
* காமராஜ் தேசிய பேரவை சார்பில் மதி பவுண்டேஷன் தலைவி கோபி செல்வி தலைமை வகித்தார். பேரவை மாவட்ட தலைவர் ராமசாமி முன்னிலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர மாவட்ட காங்., தலைவர் துரை மணிகண்டன், மாநில மகளிர் காங்., செயலர் ஸ்டெல்லா, நிர்வாகிகள் பாரதி, முகமது அலியார் கலந்து கொண்டனர். விவசாய சங்க தலைவர் ரெங்கமணி, கிழக்கு மாவட்ட காங்,, துணைத்தலைவர் சவந்திரரான் இனிப்பு வழங்கினர்.
* திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் நடந்த விழாவில் மான்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். மன்ற நிர்வாகிகள் காளிதாஸ், சிவாஜி பத்மநாபன், ஜெயச்சந்திரன், பாலசுப்பிரமணி, மகாலிங்கம், செல்வராஜன், தமிழ்வாணன், ராஜேஷ், சங்கரன், மோதிலால், திருமுருகன், முத்துக்குமார், ஏழுமலை, அர்ச்சுணன், ஜெயப்பிரகாஷ், வைரவேல், திருமலைச்சாமி, கோபிநாத் பங்கேற்றனர்.
பழநி: பழநி பாரத் வித்யா பவன் மெட்ரிக் பள்ளியில் செயலர் குப்புசாமி தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் சிவக்குமார் உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
* ஆயக்குடி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் முதல்வர் காசி ஆறுமுகம் தலைமை வகித்தார். காமராஜர் படத்திற்கு மரியாதை செய்தனர்.
* பழநி செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளியில் 20க்கு மேற்பட்ட மாணவர்கள் இணைந்து பத்தடி உயரம் 10 அடி அகலம் நீளமுள்ள காமராஜர் ஓவியத்தை கூலாங்கற்களை கொண்டு வடிவமைத்தனர். காமராஜர் வேடமணிந்து மாணவர்கள் வந்தனர். தாளாளர் ஜேம்ஸ் கென்னத் சாமுவேல் ,மாணவர்கள் கலந்து கொண்டனர்.
* நெய்க்காரப்பட்டி, குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி ராஜ்குமார், ராஜா கவுதம் கலந்து கொண்டனர்
* ரூக்குவார்பட்டி ஹயக்ரீவர் மெட்ரிக் பள்ளியில் பாலாறு செல்வி தலைமை வகித்தார்.
* அக்ஷயா சி.பி.எஸ்.இ., பள்ளியில பள்ளி நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன், முதல்வர் மங்கையர்கரசி கலந்து கொண்டனர்.
* நடேசன் சன்னதி அங்கன்வாடி பள்ளியில் நகராட்சி கவுன்சிலர் புஷ்பலதா தலைமையில் காமராஜர் படத்திற்கு மரியாதை செலுத்தினர். பிளாஸ்டிக் சேர்களை கார்த்திகேயன் வழங்கினார் டவுன் நாடார் உறவின்முறை நல சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
* தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நடந்த விழாவிற்கு நகரத் தலைவர் சுந்தர் தலைமை வைத்தார்.
மாவட்டத் துணைத் தலைவர் பாப்பு சாமி, நகராட்சி வழக்கறிஞர் மணிகண்ணன், மாவட்ட இளைஞரணி தலைவர் சுந்தரபாண்டியன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அருண், மாவட்ட பொதுச் செயலாளர் கனகசபாபதி, நகரத் துணைத் தலைவர் பீட்டர், நகர பொதுச்செயலாளர் காதர் முகமது, பழநி வணிகர் சங்க லாட்ஜ் அசோசியேஷன் செயலாளர் கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
நத்தம்: ஆர்.சி., சிறுமலர் நடுநிலைப்பள்ளி சார்பில் காமராஜர் பிறந்தநாள் ஊர்வலம் ஒன்றிய அலுவலகம் முன்பிருந்து புறப்பட்டது. மீனாட்சிபுரம், நத்தம் பேருந்து நிலையம் வழியாக ஆர்.சி., பள்ளியை சென்றடைந்தது. ஆர்.சி., மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஜெரால்ட் ஸ்டீபன் செல்வா, முதல்வர் பிரின்சஸ் தெரசாள், துணை முதல்வர் கிறிஸ்டின் ராஜம் கலந்து கொண்டனர்.
வேடசந்துார் : மேல்மாத்தினிபட்டி சவுடாம்பிகா துவக்க பள்ளி , மாரம்பாடி சிறுமலர் பள்ளியில்
காலை உணவு திட்டத்தை தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரகடம்புகோபு, சரவணன், ஒன்றிய செயலாளர் கவிதா, ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி, துணை த்தலைவர் தேவ சகாயம், ஒன்றிய அவைத்தலைவர் ஆரோன், இளைஞரணி துணைத் தலைவர் ரவிசங்கர், ஊராட்சி தலைவர்கள் முருகன், சுப்ரமணி, ரோசாரியோ பங்கேற்றனர்.
வடமதுரை: வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி, மழலையர் துவக்கப் பள்ளியில் நடந்த விழாவில் தாளாளர் ஆர்.கே.பெருமாள் தலைமை வகித்தார்.
செயல் இயக்குனர்கள் சுப்பம்மாள், அருள்மணி, ஹரிஸ் செந்தில் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராமு, ரவிச்சந்திரன், பி.டி.ஏ., தலைவர் குப்பாச்சி பங்கேற்றனர். போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
* அய்யலுார் தங்கம்மாபட்டி சக்திசாய் மெட்ரிக்., பள்ளியில் தாளாளர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். முதல்வர் சாந்தி முன்னிலை வகித்தார். போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
* எரியோடு தோப்புபட்டி வித்யோதயா மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தாளாளர் கிருஷ்ணவேணி, துணை முதல்வர் பூங்கோதை முன்னிலை வகித்தனர். போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
*எரியோடு பஸ் ஸ்டாப் பகுதியில் லோக் தந்த்ரிக் ஜனதா தளம் சார்பில் நடந்த விழாவில் மாநில செயலாளர் பால்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் பள்ளிச் செயலர் பட்டாபிராமன் தலைமை வகித்தார்.
நிர்வாகி புருஷோத்தமன் மரியாதை செலுத்தினார். தாளாளர் சுந்தராம்பாள், பள்ளி முதல்வர் சவும்யா கலந்து கொண்டனர்.
* பழனிஆண்டவர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் காமராஜர் உருவப்படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது.
தமிழ் துறை 'பழனம்' தமிழ் பேரவையின் சார்பில் பேச்சுப்போட்டி நடந்தது. கல்லுாரி முதல்வர் வாசுகி தலைமை வகித்தார்.