/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குறைதீர் கூட்டத்தில் தாயை துாக்கி வந்து மனு அளித்த மகள்கள் குறைதீர் கூட்டத்தில் தாயை துாக்கி வந்து மனு அளித்த மகள்கள்
குறைதீர் கூட்டத்தில் தாயை துாக்கி வந்து மனு அளித்த மகள்கள்
குறைதீர் கூட்டத்தில் தாயை துாக்கி வந்து மனு அளித்த மகள்கள்
குறைதீர் கூட்டத்தில் தாயை துாக்கி வந்து மனு அளித்த மகள்கள்
ADDED : ஜூலை 16, 2024 04:06 AM

திண்டுக்கல் : நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக தாயை துாக்கி வந்து மனு அளித்த மகள்கள், வேலை கோரி குவிந்த மாற்றுத்திறனாளிகள் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 270 பேர் முறையிட்டனர்.
கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார். 19 பயனாளிகளுக்கு ரூ.8.46 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார் கலந்துகொண்டனர்.
தாயை துாக்கி வந்து மனு அளித்த மகள்கள்: குஜிலியம்பாறை அடுத்த வடுகம்பாடி பகுதியை சேர்ந்தவர் ரா.கன்னியம்மாள் 90. இவரை மகள்கள் 4 பேர், பேரன் ஆகியோர் துாக்கிகொண்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்ற கலெக்டர் பூங்கொடி, பழநி ஆர்.டி.ஓ., மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
கன்னியம்மாள் குடும்பத்தினார் கூறியதாவது:
வரதராஜபுரம் பகுதியில் கன்னியம்மாள் பெயருக்கு 10 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் மோசடியாக பட்டா மாறுதல் செய்துவிட்டனர்.
இன்று வரை வருவாய்த் துறை ஆவணங்களில் கன்னியம்மாளின் பெயரே உள்ளது.
எங்களது நிலத்துக்கான பொது பாதையையும் ஆக்கிரமித்துவிட்டனர்.முறைகேடாக பதிவு செய்து கொடுத்த குஜிலியம்பாறை சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து போலி ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளிகள் மனு
நிலக்கோட்டை எத்திலோடு கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அளித்த மனு: மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 2023ல் சில ஓடைகள் ஒதுக்கப்பட்டது.
அதே போல் இந்தாண்டும் வேலைவாய்ப்பு வழங்கி வாழ்வாதாரத்துக்காக காக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.