/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தாய் கண் முன் 7ம் வகுப்பு மாணவன் பரிதாப மரணம் தாய் கண் முன் 7ம் வகுப்பு மாணவன் பரிதாப மரணம்
தாய் கண் முன் 7ம் வகுப்பு மாணவன் பரிதாப மரணம்
தாய் கண் முன் 7ம் வகுப்பு மாணவன் பரிதாப மரணம்
தாய் கண் முன் 7ம் வகுப்பு மாணவன் பரிதாப மரணம்
ADDED : ஜூன் 03, 2024 04:14 AM
துாத்துக்குடி: துாத்துக்குடி, ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த பொன்ராஜ் -- தமிழ்ச்செல்வி தம்பதி மகன் சுனில் காளிதாஸ், 14; ஏழாம் வகுப்பு மாணவன். பள்ளி ஆசிரியை திருமணத்தில் பங்கேற்பதற்காக சுனில் காளிதாஸ், தாய் தமிழ்செல்வியுடன் டூவீலரில் சென்றார்.
அப்போது, நான்காம் ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டூவீலரில் பின்னால் அமர்ந்திருந்த சுனில் காளிதாஸ் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி சக்கரத்தில் சிறுவன் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். விபத்து நிகழ்ந்ததும் லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார்.