ADDED : ஜூன் 03, 2024 04:13 AM
திண்டுக்கல்: தமிழ்நாடு கால்பந்து கழகம் சார்பில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் கால்பந்து நடுவர் தேர்வுக்கான உடற்தகுதி தேர்வு நடந்தது.
திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 68 பேர் 8,7,6 மூன்று நிலைகளுக்கான எழுத்து தேர்வில் பங்கேற்றனர். திருவள்ளூர் நடுவர் பயிற்சியாளர் ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் தேர்வு நடந்தது. தேர்வு மையத்தில் பள்ளியின் தலைமையாசியர் ஆரோக்கியதாஸ், மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம்,பொறுப்பாளர்கள் ஈசாக்கு, தங்கதுரை, அருண் ஜெயக்குமார். டேமியன் பங்கேற்று அனைத்து ஏற்பாட்டையும் செய்தனர்.