/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மழை, காற்றால் பாதிப்பு நிவாரணம் வழங்குங்க மழை, காற்றால் பாதிப்பு நிவாரணம் வழங்குங்க
மழை, காற்றால் பாதிப்பு நிவாரணம் வழங்குங்க
மழை, காற்றால் பாதிப்பு நிவாரணம் வழங்குங்க
மழை, காற்றால் பாதிப்பு நிவாரணம் வழங்குங்க
ADDED : ஜூன் 03, 2024 04:14 AM
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு சுற்று வட்டார பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
ஜி.தும்மலபட்டி கோபால்சாமி கோவில் மலை அடிவார பகுதியில் கோபி, அன்பு, தினேஷ், பழனிச்சாமி உள்ளிட்ட பலர் தங்கள் தோட்டங்களில் தென்னை மரங்களோடு ஊடுபயிராக செவ்வாழை சாகுபடி செய்தனர்.
சூறாவளி காற்றால் நுாற்றுக்கணக்கான செவ்வாழை தாருடன் ஒடிந்து விழுந்தது.
பல தென்னை மரங்கள் சாய்ந்தது. சூறைக்காற்றில் தேக்கு, குமுல் உள்ளிட்ட மரங்களும் சாய்ந்தது. தென்னை மரங்கள் மின்சார கம்பிகளில் விழுந்து கிடப்பதால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு வருவாய்த்துறையினர் உரிய நிவாராணம் வழங்க வேண்டுமென பாதிப்படைந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.