/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 4.66 கோடி வரிப்பணம் 'லபக்'கிய ஊழியருக்கு காப்பு 4.66 கோடி வரிப்பணம் 'லபக்'கிய ஊழியருக்கு காப்பு
4.66 கோடி வரிப்பணம் 'லபக்'கிய ஊழியருக்கு காப்பு
4.66 கோடி வரிப்பணம் 'லபக்'கிய ஊழியருக்கு காப்பு
4.66 கோடி வரிப்பணம் 'லபக்'கிய ஊழியருக்கு காப்பு
ADDED : ஜூலை 21, 2024 06:55 AM

திண்டுக்கல், : திண்டுக்கல், நெட்டு தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 35; திண்டுக்கல் மாநகராட்சி வரி வசூல் மையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த இவர், வரி வசூல் பணம், 4.66 கோடி ரூபாயை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, சரவணன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். முறைகேடுகளை கண்காணிக்கத் தவறியதாக மாநகராட்சி கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஷ் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
முறைகேடு குறித்து மாநகராட்சி கமிஷனர் தரப்பில் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு ஆதாரமாக மாநகராட்சியின் தணிக்கை அறிக்கையும் தரப்பட்டது. இதையடுத்து, புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி., பிரதீப் உத்தரவிட்டார். அதன்படி, நிதி முறைகேடு குறித்து விசாரித்த போலீசார், சரவணனை கைது செய்தனர்.