ADDED : ஜூலை 26, 2024 12:21 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டத்தை சேர்ந்த திறன்மிகு உதவியாளர் சரவணனுக்கு ஓய்வு பெற்ற செல்லையா காலிப்பணியிடத்தில் பணி உத்தரவு வழங்க வேண்டும். தகுதியான சாலை பணியாளர்களுக்கு சாலை ஆய்வாளர் பதவி உயர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் - திருச்சி ரோடு நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் அலுவலகம் முன் நெடுஞ்சாலைத்துறை அனைத்து ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயசீலன், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் ராசாத்தி பேசினர்.கூட்டமைப்பின் தலைவர்கள் மாரியப்பன், செல்வக்குமார், மணிகண்டன், ராஜா, சீனிவாசன் பங்கேற்றனர். இவர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து வழங்கப்பட்டது.