ADDED : ஜூலை 27, 2024 06:15 AM
நத்தம் : -நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஆடி 2வது வெள்ளிக்கிழமையையொட்டி லட்சார்ச்சனை நடந்தது.
இதையொட்டி கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை, துர்க்கா ஹோமம் நடந்தது. மஹாபூர்ணாகுதியை தொடர்ந்து செண்பகவல்லி அம்மனுக்கு ஏக தின லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.