ADDED : ஜூலை 27, 2024 05:35 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் ராமையன் பட்டியை சேர்ந்தவர் ஜீசஸ் ஆன்டனி.
இவரை அதே பகுதியை சேர்ந்த செந்தூரியான் ஜூலை 24ல் அரிவாளால் வெட்டினார். தாலுகா போலீசார் தேடி வந்த நிலையில் ராமையன்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த செந்துாரியானை பிடிக்க எஸ்.ஐ., பாலசுப்பிரமணி தலைமையிலான போலீசார் சென்றனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓடியபோது பள்ளத்தில் விழுந்ததில் வலது கையில் முறிவு ஏற்பட்டது. போலீசார் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.