
ஆயக்குடி : ஆயக்குடி அரசு மருத்துவமனையை இடித்து புதிய கட்டடம் கட்டி வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். ஆயக்குடி அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியை புதுப்பித்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பழநி ஆயக்குடி சந்தைப்பேட்டை அருகே தேவேந்திரகுல வேளாளர் பொதுச் சபை சார்பில் உண்ணாவிரதம் இருந்தனர்.
வருமானவரித்துறை ஓய்வு ஆணையர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.
தேவேந்திர குல வேளாளர் பொதுச் சபை செயலாளர் வெங்கடாசலம், துணைத் தலைவர் முத்துச்சாமி கலந்து கொண்டனர். தலைவர் முருகானந்தம் முடித்து வைத்தார்.