போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது
போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது
போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது
ADDED : ஜூலை 12, 2024 07:52 AM
பழநி: பழநியில் உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி ஏமாற்ற முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
பழநி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன் 35 .ஓட்டல் வைத்துள்ளார் .இவரது ஓட்டலுக்கு திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த சங்கர் 41, வந்தார்.
தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி ஓட்டல் உரிமத்தை புதுப்பிக்க பணம் கேட்டுள்ளார். சந்தேகமடைந்த காளீஸ்வரன் உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்ததில் போலி என்பது தெரிந்தது. இவரை பழநி டவுன் போலீசார் கைது செய்தனர்.