ADDED : செப் 23, 2025 01:48 AM
அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சின்னா என்பவர், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, தென்கரைகோட்டை வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் கிராம தணிக்கை அலுவலராக சென்றுள்ளார். அப்போது, கர்த்தானுார் பஸ் நிறுத்தத்தில் மண் ஏற்றி வந்த டிராக்டர் டிரைலரை நிறுத்தி சோதனை மேற்கொண்டார்.
அதில் அனுமதியின்றி மண் ஏற்றி வந்தது தெரிந்தது. இது குறித்து அவர் புகார் படி, கோபிநாதம்பட்டி போலீசார், டிராக்டர் ஓட்டுனர் ஓபிலிநாயக்கன ஹள்ளியை சேர்ந்த நந்தா, 23, என்பவரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.