/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை கோரி திரண்ட பெண்கள் அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை கோரி திரண்ட பெண்கள்
அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை கோரி திரண்ட பெண்கள்
அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை கோரி திரண்ட பெண்கள்
அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை கோரி திரண்ட பெண்கள்
ADDED : செப் 23, 2025 01:49 AM
அரூர் :எச்.தொட்டம்பட்டி பஞ்., மக்கள், நூறு நாள் வேலை திட்டத்தில், பணி வழங்கக்கோரி, அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்.,ஜ நகராட்சியாக தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது, அரூர் நகராட்சியின் அருகிலுள்ள கிராம பஞ்சாயத்துகளான எச்.தொட்டம்பட்டி மற்றும் மோபிரிப்பட்டி ஆகியவற்றை இணைக்க, நிர்வாக ரீதியிலான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் இவ்விரு பஞ்சாயத்துகளிலும் கடந்த சில மாதங்களாக, 100 நாள் வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, எச்.தொட்டம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட நாச்சினாம்பட்டி, தொட்டம்பட்டி, பச்சனாம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், 'எச்.தொட்டம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த சில மாதங்களாக, 100 நாள் வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் விவசாய கூலி தொழிலாளர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது கிராமங்களில் இத்திட்டத்தை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தங்களது கிராமப்பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க கூடாது' என்றனர்.
பின், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.