/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ராட்டினத்தில் காலை நீட்டிய பெண்ணுக்கு எலும்பு முறிவு ராட்டினத்தில் காலை நீட்டிய பெண்ணுக்கு எலும்பு முறிவு
ராட்டினத்தில் காலை நீட்டிய பெண்ணுக்கு எலும்பு முறிவு
ராட்டினத்தில் காலை நீட்டிய பெண்ணுக்கு எலும்பு முறிவு
ராட்டினத்தில் காலை நீட்டிய பெண்ணுக்கு எலும்பு முறிவு
ADDED : ஜூலை 01, 2025 01:29 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி பிரியா, 25. இவர்களுக்கு இரு குழந்தைகள். நேற்றிரவு குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் நடக்கும் மாங்கனி கண்காட்சிக்கு சென்றனர். அங்கு கீழிலிருந்து மேல் சுழலும் ராட்சத
ராட்டினத்தில் பிரியா ஏறினார்.
கீழிலிருந்து மேல் சென்று, அங்கு, 3 வினாடி நின்ற பின், வட்டமடித்து கீழிறங்கும் ராட்டினத்தில் ஏறிய பிரியா, இரண்டு சுற்றுக்கு பின், காலை வெளியே நீட்டியபோது, பக்கவாட்டில் இருந்த இயந்திரத்தில் மோதி, அவரது கால் முறிந்தது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.