ADDED : ஜூலை 01, 2025 01:28 AM
அரூர், அரூர் அரசு கல்லுாரி அருகிலுள்ள வனப்பகுதி மற்றும் கொளகம்பட்டி காப்புக்காட்டில், மயில், முயல், காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதி நீர்நிலைகளில் போதியளவில் நீர் இல்லாததால், தண்ணீர் தேடி, விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் நுழைகின்றன. அவ்வாறு வரும் விலங்குகள்,
சில நேரங்களில், வாகனங்களில் அடிபட்டும், நாய்களிடம் சிக்கியும், உயிரிழந்து வருகின்றன. நேற்று காலை வனப்பகுதியில் இருந்து, ஆண் மான் ஒன்று, அரூர் அரசு கல்லுாரி வளாகத்திற்கு, தண்ணீர் தேடி வந்தது. இதைக்கண்ட அங்கிருந்த நாய்கள் விரட்டி கடித்ததில், மான் பலியானது. மொரப்பூர் வனத்துறையினர் மானை மீட்டுச் சென்றனர்.