ADDED : ஜூலை 01, 2025 01:28 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட கோபிநாதம்பட்டி ஸ்டேஷனில், எஸ்.எஸ்.ஐ.,க்களாக பணிபுரிந்த கமலநாதன், ஆனந்தன், பிரகாசம் ஆகியோருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா, கோபிநாதம்பட்டியில் நேற்று நடந்தது.
இதில், அரூர் டி.எஸ்.பி., ராமமூர்த்தி (பொறுப்பு), இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர், கமலநாதன், ஆனந்தன், பிரகாசம் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். விழாவில், போலீசார் அவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.