Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கமிஷன் பணத்தை பிரித்து கொடுக்கவில்லை தி.மு.க., செயலாளரை கண்டித்து போஸ்டர்

கமிஷன் பணத்தை பிரித்து கொடுக்கவில்லை தி.மு.க., செயலாளரை கண்டித்து போஸ்டர்

கமிஷன் பணத்தை பிரித்து கொடுக்கவில்லை தி.மு.க., செயலாளரை கண்டித்து போஸ்டர்

கமிஷன் பணத்தை பிரித்து கொடுக்கவில்லை தி.மு.க., செயலாளரை கண்டித்து போஸ்டர்

ADDED : ஜூலை 02, 2025 02:11 AM


Google News
தர்மபுரி, 'தர்மபுரி, தி.மு.க., வை சேர்ந்த ஒன்றிய செயலாளர் கிராம பஞ்.,ல் நடக்கும் அரசு திட்ட வளர்ச்சி பணிகளுக்கு வாங்கிய கமிஷனை, கிளை நிர்வாகிகளுக்கு பிரித்து கொடுக்கவில்லை' என, தி.மு.க.,வினர் போஸ்டர் அடித்து ஒட்டியது, தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கிராம பஞ்.,களில் நடக்கும் பெரும்பாலான அரசு பணிகள் தரமற்றவையாக இருப்பதாக, அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக, அரசு அறிவிக்கும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான டெண்டர்களை, கட்சி மற்றும் கட்சி சாராத ஒப்பந்ததாரர்கள் எடுத்து செய்து வருகின்றனர். இதில், கிராம பஞ்.,ல் உள்ள கிளைகள் முதல், மாவட்ட செயலாளர்கள் வரை கமிஷன் கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதால், பெரிய அளவில் லாபம் கிடைக்காததால், ஒப்பந்ததாரர்கள் பணிகளை பெயரளவில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒப்பந்ததாரர்கள் கொடுத்த கமிஷனை, கிளை நிர்வாகிகளுக்கு பிரித்து கொடுக்கவில்லை என, தி.மு.க., ஒன்றிய செயலாளரை கண்டித்து, தர்மபுரியில் நேற்று, தி.மு.க.,வினர் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். அந்த போஸ்டரில், 'தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க.,வில் வடக்கு ஒன்றிய செயலாளர் மாது----வை வன்மையாக கண்டிக்கிறோம்.

தர்மபுரி ஒன்றியம், வெள்ளாளப்பட்டி பஞ்.,ல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 2024---- - 25 நிதியாண்டில், 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மிக்க மகிழ்ச்சி. அந்த நிதியினை முறையாக, ஒன்றிய செயலாளர் மூலமாக டெண்டர் விட்டு, அங்கு உள்ள கிளை நிர்வாகிகளுக்கு டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள், கமிஷன் பணத்தை வாங்கி, கிளைக் கழக நிர்வாகிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று தலைமை கழகம் சொன்னதாக, ஒன்றிய செயலாளர் தெரிவித்தார்.

ஆனால், மொத்த கமிஷன், 5 லட்சம் ரூபாயை மாது எடுத்துக்கொண்டார். இந்த தொகையை கிளை கழக நிர்வாகிகளுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். அதேபோல், கடந்த, 4 ஆண்டுகளில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளார். எனவே, அவர் மீது தலைமை அலுவலகம் நடவடிக்கை எடுக்குமா' என, வெள்ளாளப்பட்டி பஞ்., தி மு.க., என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

இது குறித்து, தி.மு.க., ஒன்றிய செயலாளர் மாது கூறியதாவது:

நான் யாரிடமும் கமிஷன் வாங்கவில்லை. கிராம பஞ்.,ல் நடக்கும் பணிகளுக்கு ஆன்லைன் டெண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இதில், அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆன்லைனில் டெண்டர் போட்டு ஒப்பந்தத்தை பெற்று வருகின்றனர். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் அரசு நிர்ணயிக்கும் தொகையை விட, 10 முதல், 20 சதவீதம் வரை குறைவாக டெண்டர் போட்டு, அ.தி.மு.க., பா.ம.க.,வினர் எடுத்துச் செல்கின்றனர். அவர்களிடம் எப்படி கமிஷன் கேட்க முடியும். அவர்களிடம் கமிஷன் வாங்கி கொடுக்க வேண்டுமென என்னை வலியுறுத்துகின்றனர்.

எங்கள் பஞ்.,ல் நடக்கும் பணியை மற்ற கட்சியினர் எடுத்து செய்கின்றனர். அவர்களிடம், 100 ரூபாய் கூட கமிஷன் வாங்க முடியவில்லை. வெள்ளாளபட்டியில், தி.மு.க.,வை சேர்ந்த கந்தசாமி என்பவர் வேண்டுமென்று என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும். என்பதற்காக இவ்வாறு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.

இவ்வாறு கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us