ADDED : ஜூலை 25, 2024 01:40 AM
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த எலுமிச்சனஹள்ளியில், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.இதில், வருவாய்த்துறையின் சார்பில், 1.08 கோடி ரூபாய் மதிப்பில், 166 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்-டாக்கள், விபத்து நிவாரண உதவித்தொகை, இயற்கை மரணம் உள்ளிட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்ப-யிர்கள் துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 2 மாற்றுத்திறனாளிக-ளுக்கு, 13,680 ரூபாய் மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. மகளிர் திட்டம் சார்பில், 16 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 14.80 லட்சம் ரூபாய் மதிப்பில் வங்கிக் கடன் உதவிகளையும், கூட்டுறவுத்துறை சார்பில், 25 விவ-சாயிகளுக்கு, 34.12 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிர்கடன், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 5 பயனாளிகளுக்கு தலா, 3.50 லட்சம் வீதம், 17.50 லட்சம் மதிப்பில் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி ஆணைகள் என மொத்தம், 225 பயனாளிகளுக்கு, 1.80 கோடி மதிப்பிலான, அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார். இதில், பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், டி.ஆர்.ஓ., காயத்ரி உள்பட பலர் பங்கேற்றனர்.