/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பட்டு வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்பட்டு வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்
பட்டு வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்
பட்டு வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்
பட்டு வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 25, 2024 01:40 AM
தர்மபுரி: தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில், தர்-மபுரி பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொருளாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். இதில், பட்டுவளர்ச்சித்துறையிலுள்ள இளநிலை பட்டு ஆய்-வாளர், அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும், உதவி ஆய்வாளர் முதல் துணை இயக்குனர் வரை உள்ள அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் தாமதமின்றி உடனடியாக நிரப்ப வேண்டும். விவசாயிகளின் நலன்கருதி, மல்பெரி புதுநடவு மானியம் மற்றும் புழுவளர்ப்பு மனை மானிய தொகையை, மத்திய திட்டங்களுக்கு இணையாக, மாநில திட்டங்களிலும் உயர்த்தி வழங்க வேண்டும். பட்டு பண்ணைகள், பட்டு வித்தகங்கள் மற்றும் நுாற்பகங்கள் உள்ளிட்ட அலகுகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்ப-டுத்த, போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.புதிய அரசு பட்டு நுாற்பகங்களை கூடுலதாக அமைக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து, ஓய்வுபெற்ற பட்டு பணியாளர்களுக்கு, ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க வேண்டும். இளநிலை பட்டு ஆய்வாளர்களுக்கு, பணிநிலை மேம்பாடு வழங்க வேண்டும் என்பன, உள்ளிட்ட கோரிக்கை-களை வலியுறுத்திகவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வினயா, செயலாளர் ஸ்ரீநாத், பொருளாளர் முரளி உள்பட பலர் பங்கேற்-றனர்.