/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8,000 கன அடியாக அதிகரிப்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8,000 கன அடியாக அதிகரிப்பு
ADDED : ஜூன் 14, 2025 06:55 AM
ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 8,000 கன அடியாக அதிகரித்துள்-ளது.
தமிழக - கர்நாடகா காவிரி நீர்படிப்பு பகுதிகளில், பெய்து வரும் மழை காரணமாக, ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிக-ரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர் ஆணைய கணக்கீட்டின்படி நேற்று காலை, 10:00 மணிக்கு வினா-டிக்கு, 6,500 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, படிப்-படியாக அதிகரித்து மாலை, 6:00 மணிக்கு, 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்த-ருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகி-றது.