Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ காளியம்மன், செல்லியம்மன் கோவில் விழா கோலாகலம்

காளியம்மன், செல்லியம்மன் கோவில் விழா கோலாகலம்

காளியம்மன், செல்லியம்மன் கோவில் விழா கோலாகலம்

காளியம்மன், செல்லியம்மன் கோவில் விழா கோலாகலம்

ADDED : ஜூன் 14, 2025 06:55 AM


Google News
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்., 4வது வார்டு பிச்சன்-கொட்டாயில் உள்ள காளியம்மன், சின்ன செல்லியம்மன், பெரிய செல்லியம்மன் கோவில் திருவிழா கடந்த, 10ல் கொடி-யேற்றம், பக்தர்கள் மாலை அணிவித்தல், கங்கனம் கட்டுதல் நிகழ்ச்சியுடன்

துவங்கியது.

நேற்று முன்தினம், வாணியாறு கரையில் வீட்டு மாரியம்மனுக்கு, சக்தி அழைத்து கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு அரூர் வர்ணீஸ்வரர் கோவில் வளா-கத்தில் இருந்து, சின்ன செல்லியம்மன், பெரிய செல்லி-யம்மன் சுவாமிகளை சக்தி அழைத்து, குதிரை வாகனத்தில், அரூர் பெரிய ஏரி கரையில் அமைந்துள்ள, செல்லியம்மன் கோவி-லுக்கு மேள, தாளத்துடன் ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து சென்-றனர்.

பின், கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு, ஆட்டு கிடாய் வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாக்குழு சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us