/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கலெக்டர் அலுவலகம் வரும் மா.திறனாளிகள் தவிப்பு கலெக்டர் அலுவலகம் வரும் மா.திறனாளிகள் தவிப்பு
கலெக்டர் அலுவலகம் வரும் மா.திறனாளிகள் தவிப்பு
கலெக்டர் அலுவலகம் வரும் மா.திறனாளிகள் தவிப்பு
கலெக்டர் அலுவலகம் வரும் மா.திறனாளிகள் தவிப்பு
ADDED : ஜூன் 17, 2025 02:16 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், பொதுமக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண அவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகிறது. கடந்த, 2 மாதத்திற்கு முன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வரும் மக்கள் நெடுஞ்சாலையில் இருந்து நேரடியாக அலுவலகம் உள்ளே வருவதை தவிர்க்க, அருகிலுள்ள மற்றொரு சாலை வழியாக வரும் வகையில், வழிபாதை மாற்றப்பட்டது.
புதிய வழியிலுள்ள கேட் பூட்டப்பட்டு, சிறிய அளவிலான வழியில் மட்டும் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், பழைய வழியில் நெடுஞ்சாலையில் வருவோர், வாகனங்களில் இறங்கியதும் மாற்றுத்திறனாளிகளை சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்து செல்வது வழக்கம்.
தற்போது, அலுவலக கேட்டிற்கு உள்ளே மட்டும் சக்கர நாற்காலி பயன்படுத்துவதால், மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், 100 மீட்டர் துாரம் வரை நடந்து வரவேண்டி உள்ளது. மேலும், அலுவலகத்தில் நுழையும் இடத்திலுள்ள படிகளை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே, மாற்றுத்திறனாளிக்கு ஏற்றார் போல், வழிப்பாதையை மாற்றி அமைக்க வேண்டும் அல்லது சிறிய வழியின் அருகே, பூட்டி வைத்துள்ள கேட்டை மனு வழங்கும் நாள் அன்று திறந்து வைக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.