/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பல தலைமுறை நிலத்தை வக்பு வாரிய சொத்து என்பதை கைவிட கோரி மனு பல தலைமுறை நிலத்தை வக்பு வாரிய சொத்து என்பதை கைவிட கோரி மனு
பல தலைமுறை நிலத்தை வக்பு வாரிய சொத்து என்பதை கைவிட கோரி மனு
பல தலைமுறை நிலத்தை வக்பு வாரிய சொத்து என்பதை கைவிட கோரி மனு
பல தலைமுறை நிலத்தை வக்பு வாரிய சொத்து என்பதை கைவிட கோரி மனு
ADDED : ஜூன் 17, 2025 02:15 AM
தர்மபுரி, பல தலைமுறையாக பயன்படுத்தி வந்த நிலத்தை திடீரென, வக்பு வாரியத்திற்கு சொந்தம் என, பத்திரப்பதிவு செய்ய மறுப்பதை கைவிட வேண்டுமென, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்க வந்த கிராம மக்கள் கூறினர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: தர்மபுரி அடுத்த செட்டிக்கரை பஞ்., கான் காலனி, அவ்வை நகர் உட்பட்ட பகுதிகளில் பல தலைமுறையாக விவசாயிகள் அப்பகுதி நிலங்களில் விவசாயம் செய்து வருவதுடன், வீடு கட்டியும் வசிக்கின்றனர். இந்நிலத்தின் உரிமையாளர்கள் நிலங்களை முறைப்படி விற்பனை செய்து வந்தோம். இந்நிலையில், திடீரென பத்திர பதிவுத்துறையினர் எங்கள் நிலத்தை வக்பு வாரிய சொத்து என பதிவு செய்ய மறுக்கின்றனர்.
எங்களது பரம்பரை சொத்தில், எங்களுக்கு உள்ள உரிமையை அறிய முடியாமல் உள்ளது. இதிலுள்ள பிரச்னைகளை நீக்கி, எங்களுக்கு மீண்டும் பதிவுத்துறை மூலம், நிலங்களை பதிவு செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.