Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அரசு கல்லூரியில் கருத்தரங்கு

அரசு கல்லூரியில் கருத்தரங்கு

அரசு கல்லூரியில் கருத்தரங்கு

அரசு கல்லூரியில் கருத்தரங்கு

ADDED : ஜன 13, 2024 04:07 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி, அரசு கலை கல்லுாரி மற்றும் தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, சட்டசபை நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் கருந்தரங்கு நடந்தது.

தர்மபுரி கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். இதில் சட்டசபை துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசுகையில்,''தமிழகத்திற்கு, ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்பதை, சட்டமாக செயல்படுத்தினார். மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பஸ்சில் இலவசமாக பயணம் செய்ய காரணமானவர்,'' என்றார்.பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற கல்லுாரி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கப்பட்டது. பென்னாகரம் பா.ம.க., - எம்.எல்.ஏ., ஜிகே.மணி, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, நகராட்சி சேர்மன் லட்சுமிமாது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us