டில்லியில் குடிநீர் பஞ்சம்: ஜூன் 5ம் தேதி அவசரக் கூட்டத்தைக் கூட்ட யமுனை வாரியத்துக்கு உத்தரவு
டில்லியில் குடிநீர் பஞ்சம்: ஜூன் 5ம் தேதி அவசரக் கூட்டத்தைக் கூட்ட யமுனை வாரியத்துக்கு உத்தரவு
டில்லியில் குடிநீர் பஞ்சம்: ஜூன் 5ம் தேதி அவசரக் கூட்டத்தைக் கூட்ட யமுனை வாரியத்துக்கு உத்தரவு
ADDED : ஜூன் 03, 2024 02:21 PM

புதுடில்லி: டில்லியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க அருகில் உள்ள மாநிலங்களின் அவசர கூட்டத்தை ஜூன் 5ம் தேதி கூட்ட யமுனை நதி வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான வெப்ப அலையால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மக்கள் குடிநீருக்காக அல்லாடு கின்றனர். லாரிகளில் வரும் தண்ணீரை பிடிப்பதற்கு பெரும் போராட்டமே நடக்கிறது. கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, உபரி நீரை திறந்து விட ஹரியானா அரசுக்கு உத்தரவிடக் கோரி, அமைச்சர் ஆதிஷி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூன் 03) விசாரணைக்கு வந்தது. அப்போது, டில்லியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க அருகில் உள்ள மாநிலங்களின் அவசர கூட்டத்தை ஜூன் 5ம் தேதி கூட்ட யமுனை நதி வாரியத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு மீதான விசாரணை ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜூன் 6ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.