''தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்'': கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம்
''தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்'': கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம்
''தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்'': கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம்
ADDED : ஜூன் 03, 2024 03:02 PM

புதுடில்லி: ''தமிழர்கள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி'' என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்தநாளை இன்று (ஜூன் 3) திமுக.,வினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, முக்கிய அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். காங்., முன்னாள் தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், பிரதமர் மோடியும் கருணாநிதியின் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதாவது: கருணாநிதியின் 100வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தனது நீண்ட ஆயுளில் பொது வாழ்வில் தமிழர்கள், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி. அவர் அறிவாற்றல், புலமைக்காக மதிக்கப்படுபவர். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதல்வராக இருந்தபோதும், அவருடன் நான் நடத்திய பல உரையாடல்களை நினைவுகூர்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.