31 கோடி பெண்கள் ஓட்டளிப்பு: கைதட்டி வாழ்த்து தெரிவித்த தேர்தல் கமிஷனர்கள்
31 கோடி பெண்கள் ஓட்டளிப்பு: கைதட்டி வாழ்த்து தெரிவித்த தேர்தல் கமிஷனர்கள்
31 கோடி பெண்கள் ஓட்டளிப்பு: கைதட்டி வாழ்த்து தெரிவித்த தேர்தல் கமிஷனர்கள்

1.75 மடங்கு அதிகம்
தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்துள்ளது. ஜி7 நாடுகளின் ஓட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை விட, இந்தியாவில் ஓட்டளித்தவர்கள் எண்ணிக்கை 1.75 மடங்கு அதிகம். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர். தேர்தல் கமிஷன் கடும் சவால்களை சந்தித்து தேர்தலை நடத்தி உள்ளது. சிலர் தேர்தல் கமிஷனை விமர்சிப்பது சரியா?. வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல் நடந்துள்ளது.
10 அம்ச ஏற்பாடுகள்
ஓட்டு எண்ணிக்கைக்கு 10 அம்ச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு துவங்கிய நேரத்தையும் முடிந்த நேரத்தையும் கட்டுப்பாட்டு இயந்திரத்தில் சரிபார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். ஓட்டு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளோம். ஒவ்வொரு ஓட்டு இயந்திரத்தையும் தனி அடையாள எண் மற்றும் சீல்களை சரிபார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளோம்.